கடற்படைத் தளபதி பாகிஸ்தான் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு
 

பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ரியர்  அட்மிரல் விஜேகுணரத்ன அவர்கள்  பாகிஸ்தான் அரச மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளை நேற்று(16) சந்தித்தார்.

இந்நிகழ்வின்போது பாகிஸ்தான் பாதுகாப்பு உற்பத்தி அமைச்சர் கௌரவ. ரணா தன்வீர் ஹுசைன், கூட்டுப் படைத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் சுபைர் முஹம்மது ஹயாத், பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் முகம்மட் சக்குல்லா  மற்றும் பாகிஸ்தான் விமானப்படை பிரதானி எயார் சீப் மார்ஷல்  சொகையில் அமான் ஆகியோரை சந்தித்தார்.

இவ் உத்தியோகபூர்வ சந்திப்பின்போது இரு  அயல் நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவு  பற்றி  நினைவு கூறப்பட்டதுடன் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த  பல்வேறுபட்ட  விடயங்கள்  தொடர்பாக  இரு நாட்டு அதிகாரிளும் பகிர்ந்து கொண்டனர். 

அதனைத் தொடர்ந்து அவர்களுக்கிடையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. பாகிஸ்தானில் நடைபெற்ற அமான்-2017 கூட்டுப்பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்து கடற்படைத் தளபதி இன்று(17) வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Commander of the Navy calls on Defence Production at the Pakistan Ministry of Defence, Hon. Rana Tanveer Hussain

Commander of the Navy calls on Chairman Joint Chiefs of Staff Committee, General Zubair Mahmood Hayat

Commander of the Navy calls on Chief of Naval Staff of Pakistan, Admiral Muhammad Zakaullah

Commander of the Navy calls on Chief of Air Staff of Pakistan, Air Chief Marshal Sohail Aman