அமெரிகா மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகள் இடையில்இரன்டாம் கலந்துரையாடல்கொழும்பில்
 

இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படை அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை கடந்த 16 மற்றும் 17ம் திகதிகளில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இரண்டாவது முறையாகவும் இடம்பெற்றது.

குறித்த பேச்சுவார்த்தையில் இலங்கை கடற்படையின் நடவடிக்கைபிரிவின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களின்தலைமையிலான பிரதிநிதிகள் குழுவும் அமெரிக்காவின் ஏழாவது கடற்பிராந்தியசார்பாக கெப்டன் பிரைன் அன்டர்சன் அவர்கள் தலைமையிலான அதிதிகள் குழுவும்பங்கேற்றன.

இவர்களிடையே இடம்பெற்ற சினேகா பூர்வ கலந்துரையாடலில் இருதரப்புமுக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் இதுபோன்ற பேச்சுவார்த்தைகளின்முக்கியத்துவம் குறித்து ஆராயப்பட்டதுடன் இருதரப்பு பயிற்சி முன்னேற்றம் தொடர்பாக அவர்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்தனர்.