கடற்படை தளபதி மடு தேவாலயத்திற்கு அஞ்சலி செலுத்தினார்
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் மற்றும் அவரின் மனைவி திருமதி திருனி சின்னய்யா ஆகியோர் கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி மன்னார் மடு ள எமிலியன் பில்லெய் அருட்தந்தை அவர்களால் சிறப்புப் பிரார்த்தனைகள் செய்து கடற்படை தளபதி அவர்கள் மற்றும் அவரின் மனைவி திருமதி திருனி சின்னய்யா ஆகியோர் உட்பட அனைத்து கடற்படையினறுக்கும் ஆசிர்வதிக்கப்பட்டது.

வட மத்திய கடற்படை கட்டளையில் மேற்கொன்டுள்ள விஜயத்தின் போது குறித்த தேவாலயத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இன் நிகழ்வுக்காக வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அடமிரல் மெரில் விக்ரமசிங்க அவர்கள் உட்பட பல மூத்த அதிகாரிகள் கழந்துக்கொன்டனர். கடற்படை தளபதி வட மத்திய கடற்படை கட்டளையில் மேற்கொன்டுள்ள விஜயத்தை நினைவு கூறும் வகையில் ரியர் அட்மிரல் விக்ரமசிங்க அவர்களால் கடற்படை தளபதி அவருக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கப்பட்டது.