நீரில் மூழ்கிக் கொண்டிருந்த இருவரை (02) கடற்படையினரால் மீட்பு
 

நுவரெலியா கிரிகோரி ஏரியில் ஜெட் ஸ்கை (Jet Ski) படகுகளில் பயணம் செய்யும் போது படகுகள் கவிழ்ந்து நீரில் மூழ்கிக் கொண்டிருந்த இருவரை (02) கடற்படையினரால் நேற்று (செப்டம்பர் 12) மீட்டபட்டனர்.

அம்பாறை உகனை பகுதியில் சேர்ந்தவர்களான இவர்கள் பயணம் செய்த படகு கட்டுப்படுத்த முடியாததால் இந்த விபத்து நடந்தது. இதை பற்றி தகவல் கிடைத்த பின் உடனடியாக செயல்பட்ட கடற்படை அவசர மீட்பு மற்றும் நிவாரண தீர்வு பிரிவின் (4 RU) கடற்படையினர்கள் குறித்தநபர்களை மீட்டு தரைக்கு கொன்டுவந்துள்ளனர்.