இந்தியாவின் கனடிய உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

காலி கலந்துரையாடல் 2017 சர்வதேச கடல் மாநாட்டில் பங்கு பெற்ற இந்தியாவின் கனடிய உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் மிசெல் ஹோகன் அவர்கள் இன்று (ஒக்டொபர் 11) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இத்தகைய ஒரு சர்வதேச மாநாடு சிறந்த முறையில் ஏற்பாடு செய்து நாடுகளின் கடற்படைகள் இடையே உள்ள நட்பு உறவை வளர்ப்பதற்கான வாய்ப்பை வழங்கியதை சம்பந்தமாக அவரது நன்றியை தெரிவித்தார். இன் நிகழ்வு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.