இலங்கை மற்றும் சீன கடற்படைகள் இடையில் சில நட்பு போட்டிகள்
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு நேற்று (நவம்பர் 10) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள 'குய் ஜி குவாங்' எனும் சீன கடற்படை கப்பலின் விளையாட்டு அணிகள் மற்றும் இலங்கை கடற்படை விளையாட்டு அணிகள் இனைந்து இன்று வெலிசரை இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவன மைதானத்தில் சில நட்பு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளனர்.

அங்கு கால்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றதாக குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிகளில் கலந்து கொள்வதில் இவர்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும், ஆற்றலுடனும் இருந்தனர். மேலும் இலங்கை கடற்படையின் பயிற்சி பெறும் அதிகாரிகளுக்காக தற்காப்பு கலை பற்றிய புரிந்துணர்வு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த வாய்ப்புகள் இரு நாடுகளிலும் கடற்படை ஊழியர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தன.