தேசிய மட்ட நிபுணர்களின் டேபிள் டென்னிஸ் போட்டி தொடரில் கடற்படைக்கு வெற்றி
 

இலங்கை நிபுனர்களின் டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு ஏற்பாடுசெய்துள்ள தேசிய மட்ட நிபுணர்களின் டேபிள் டென்னிஸ் போட்டிதொடர் – 2017 ஆண்கள் பிரிவுக்கான ஏ குழுவில் போட்டி கடற்படையினர் வெற்றிபெற்றனர். அங்கு கடற்படை அணி பிரதிநிதித்துவப்படுத்திய சாதாரன வீரர் இந்திக பிரசாத் சில்வா சிறந்த திறமைகளை வெழிகாட்டினார். மேலும் கொமடோர் சிசிர வீரகோன் மற்றும் கொமான்டர் திலக் மலலகம ஆகிய மூத்த அதிகாரிகளும் கடற்படை அணி பிரதிநிதித்துவப்படுத்தினார்கள்

17 வது முறையாக ஏற்பாடுசெய்யப்பட்ட குறித்த போட்டிதொடர் கடந்த நவம்பர் 11ஆம் திகதி கல்கிசை செயிண்ட் தாமஸ் கல்லூரி உள்விளையாட்டு அரங்கத்தில் இடம்பெற்றது. குறித்த இப் போட்டி தொடருக்காக முப்படை மற்றும் இலங்கையின் நிபுனர்களின் ஆண்,பெண் டேபிள் டென்னிஸ் கழகங்கள் குறித்து சுமார் 25 அணிகள் கழந்துக்கொன்டன.