ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் நிவுகாசல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் நிவுகாசல் இன்று (நவம்பர் 14) இலங்கை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளன. 184 பேர் பணியாற்றும் இக் கப்பல் 138.1 மீட்டர் நீளமும் 14.3 மீட்டர் அகலமும் 4200 டன் கொள்ளளவும் கொண்டுள்ளது.

மேலும், 04 நாட்கள் தரித்திருக்கவுள்ள இக்கப்பலின் சிப்பந்திகள் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்படவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர். இதேவேளை, குறித்த கப்பல் இம்மாதம் (நவம்பர் 17 ஆம் திகதி புறப்படவுள்ளது.