இலங்கை கடற்படை கப்பல் மிஹிகதவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் அபேவர்தன பன்டார கடமையேற்பு
 


இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான மிஹிகத கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (கடல் அளவிடல்) அபேவர்தன பன்டார அவர்கள் இன்று  (மார்ச் 06 ) தன்னுடைய பதவியில்  கடமையேற்றினார். கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கொமான்டர் ரன்ஜித் வல்கம்பாய அவர்களால் இலங்கை கடற்படை கப்பல் மிஹிகதவில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டன.

காலி இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷின நிருவனத்தில்  இடம்பெற்ற இன் நிகழ்வுக்காக கொடி கட்டளையின் கப்பல் பயிற்சி அதிகாரி கொமான்டர் (சமிக்ஞைகள்) ஜீவகரத்ன அவர்கள் கழந்துகொன்டார். கப்பலின் புதிய கட்டளை தளபதி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.