கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க கடமையேற்பு
 


கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்கள் இன்று  (ஜூலை 08) ஆம் திகதி தன்னுடைய பதவியில்  கடமையேற்றினார். குறித்த கட்டளையின் முன்னாள் தளபதியான ரியர் அட்மிரல் நிராஜ ஆட்டிகல அவர்களினால் கடற்படை கப்பல் பட்டறையில் உள்ள தளபதி அலுவலகத்தில் வைத்து கடற்படை பாரம்பரியமாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்களுக்கு கடமைகள் ஒப்படைக்கப்பட்டது.
 
அங்கு கடற்படை மரபுகளுக்கு அமைவாக விசேட கடற்படை அணிவகுப்பு மரியாதையளித்து புதிய தளபதியவர்களை வரவேற்கப்பட்டதுடன் முன்னாள் தளபதியவர்களுக்கு சக அதிகாரிகள் தனது வாழ்த்துக்களை தெரிவித்து பிரியாவிடை அளித்தார்கள். குறித்த  நிகழ்வுக்காக கிழக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதியான நன்தன ஜயரத்ன அவர்கள் உட்பட  துறை தளபதிகள் மற்றும் மூத்த அதிகாரிகளின் கலந்து கொண்டனர்.