சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கடற்படையினரினால் கைது
 


தென் கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் காலி மீன்வளத்துறை ஆய்வாளர்கள் இனைந்து இன்று (ஜனவரி 11) காலையில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அம்பலாங்கொட பிரதேசத்திலிருந்து 03 கடல் மைல்கள் தூரத்தில் உள்ள கடல் பகுதியில் சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டது. அங்கு அவர்களிடமிருந்து 04 சட்டவிரோத வலைகள், ஒரு டிங்கி படகு, கெனோய் வகயில் ஒரு படகு மற்றும் மற்ற மீன்பிடி பொறுட்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

அதன் படி கைது செய்த நபர்கள் மற்றும் மீன்பிடி பொறுட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காலி கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.