கெலிஹேன களப்பு பகுதியில் காணாமல் போன மீனவரை கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது
 


நேற்று (ஜனவரி 11) சிலாபம் கெலிஹேன களப்பு பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் காணாமல் போனதாக சிலாபம் பொலிஸ் நிலையம் மூலம் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டது. குறித்த அறிவிக்கயின் படி கடற்படை நீர் முழ்கி பிரிவின் 06 கடற்படையினர்கள் குறித்த இடத்துக்கு சென்றனர்.

அதன் படி கடற்படையினர் இன்று (ஜனவரி 12) காலையில் இருந்து கெலிஹேன களப்பு பகுதியில் 5 மணி நேரத்திற்கும் மேலாக மேற்கொன்டுள்ள கடின உழைப்பின் குறித்த நபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. சிலாபம் கெலிஹேன பகுதியில் குடியிருப்பாளராகிய குறித்த நபரின் உடல் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாபம் பொலிஸ் நிலையத்துக்கு ஒப்படைக்கப்பட்டது.