கடலாமை இறைச்சியுடன் இரண்டு பெண்கள் கடற்படையினரினால் கைது
 


வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் நல்லதரன்கட்டு பகுதியில் நேற்று (ஜனவரி 12) மேற்கொன்டுள்ள ரோந்துப் பயணத்தின் போது இறைச்சிக்காக கடலாமைகளை கொன்ற இரண்டு (02) பெண்கள் கைதுசெய்யப்பட்டது. அங்கு அவர்களமிருந்து 25 கிலோ கிராம் கடலாமை இறைச்சி மற்றும் 211 கடலாமை முட்டைகள் கைதுசெய்யப்பட்டது.

குறித்த இரண்டு பெண்கள் , கடலாமை இறைச்சி மற்றும் முட்டைகள் கடற்படையினர்களினால் கைதுசெய்யப்பட்டதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஆனவிலுந்தாவ வனவிலங்கு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் கடந்த ஜனவரி 10 ஆம் திகதியும் வங்காலை பகுதியில் 3.185 கிலோ கிராம் கடலாமை இறைச்சியுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடத்தக்கது.