கஞ்சாவுடன் மூவர் கடற்படையினரினால் கைது
 


தெக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் திக்வெல்ல பொலிஸ் நிலையத்தில் உத்தியோகத்தர்கள் இணைந்து மாத்தறை, வெவ்ருகன்னல பகுதியில் நேற்று (பெப்ரவரி 08) மேற்கொன்டுள்ள சோதன நடவடிக்கையின் போது 315 கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டன. குறித்த நபர்கள் கஞ்சா விற்பனை செய்யும் போது இவ்வாரு கைது செய்யப்பட்டுள்ளது. இந்த கஞ்சா 315 கிராம் கேரல மற்றும் ஊள்ளூர் கஞ்சாவுடன் கலந்து உள்ளது. மேலும் கஞ்சா விற்பனைக்காக பயன்படுத்திய துவித்சக்கர வண்டியும் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்கள் மாத்தறை, பெலிஅத்த பகுதிகளில் வசிக்கின்ற 43, 41 மற்றும் 30 வயதானவர்களாக அடயாலம் கானப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட குறித்த கேரள கஞ்சா பொதி, துவித்சக்கர வண்டி மற்றும் சந்தேகநபர்கள் பற்றிய மேலதிக சட்ட நடவடிக்கைகள் திக்வெல்ல பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகின்றது.