இலங்கை கிழக்கு கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் ஏழு (07) பேர் கடற்படையினரினால் கைது
 


இலங்கை கிழக்கு கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் ஏழு பேர் (07) இன்று (பெப்ருவரி 09) கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது. அதன் படி புல்மோட்டை, கோக்குதுடுவாய் பகுதிக்கு கிழக்கு கடலில் கடற்படையினர் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது இவ்வாரு இவர்களை கைது செய்யப்பட்டன. அப்பொலுது அவர்களின் மீன்பிடி படகொன்றும் (Dhow) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கப்பல் பட்டறைக்கு கொன்டுவந்து மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.