கடற்படை சேவா வனிதா பிரிவு மற்றும் கடற்படை நல பிரிவு மூலம் கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு ஒரு மில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட நன்கொடை

கடற்படை சேவா வனிதா பிரிவு மற்றும் கடற்படை நல பிரிவு ஆகியவை இணைந்து கொழும்பு மெலே வீதியில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் பயன்பாட்டிற்காக 01 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு 2020 செப்டம்பர் 14 ஆம் திகதி சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன தலைமையில் கல்லூரி ஆடிட்டோரியத்தில் இடம்பெற்றது.

கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவையாக மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தில் குறித்த பாடசாலைக்கு ஒரு மல்டிமீடியா ப்ரொஜெக்டர் (Multimedia Projector) பாடசாலை நூலகத்திற்கான புத்தகங்கள் மற்றும் கல்லூரி ஆய்வகங்களுக்கான தளபாடங்கள் ஆகியவற்றை வழங்கப்பட்டது. இதற்கிடையில், நீண்ட காலமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 குறைபாடுள்ள கணினிகளை சரிசெய்ய தேவையான ஏற்பாடுகளையும் செய்யப்பட்டது. இது தவிர, கடற்படை சேவா வனிதா பிரிவு மற்றும் கடற்படை நல பிரிவு மூலம் பாடசாலையின் பாதுகாப்பிற்கு அவசியமான பாதுகாப்பு கெமரா அமைப்பை மீண்டும் நிறுவப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் முதல்வர், கடற்படை சேவா வனிதா பிரிவு மற்றும் கடற்படை நல பிரிவு மூலம் கல்லூரியின் நீண்டகால குறைபாடுகளை பூர்த்தி செய்ய முடிந்தது என்று கூறினார். பாதுகாப்பு சேவைகள் கல்லூரி தொடங்கப்பட்டதிலிருந்து பாடசாலை குழந்தைகளின் மற்றும் பாடசாலையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையினர் ஆற்றிய பங்களிப்புக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார், 2020 செப்டம்பர் 14 ஆம் திகதி கடற்படை வழங்கிய நன்கொடை குறித்து மேலும் நன்றி தெரிவித்தார்.

இந் நிகழ்வுக்காக சேவா வனிதா பிரிவின் செயற்குழு உறுப்பினர் திருமதி குமாரி வீரசிங்க, சிரேஷ்ட குழு உருப்பினர் திருமதி உதேனி குலரத்ன உட்பட செயல் இயக்குநர் பொது சேவைகள் மற்றும் கடற்படை நல இயக்குநர், கடற்படை பல் சேவைகள், இயக்குநர் கடற்படை சிவில் பொறியாளர் அதிகாரி (திட்டமிடல்), கொழும்பு பாதுகாப்பு கல்லூரியின் அதிபர் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், சேவா வனிதா பிரிவின் பணியாளர்கள் கழந்து கொண்டனர்.