சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கடற்படை சேவா வனிதா முன்பள்ளி குழந்தைகளின் கலை கண்காட்சி

2020 அக்டோபர் 01 ஆம் திகதி ஈடுபட்டுள்ள சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி சந்திமா உலுகேதென்ன அவர்களின் கருத்துப்படி கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் இலங்கை கடற்படை கப்பல் கெமுனு, திஸ்ஸ, பண்டுகாபய மற்றும் தக்ஷின நிருவனங்களில் பராமரிக்கப்படுகின்ற முன்பள்ளிகளில் குழந்தைகளின் கலை திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் அக்டோபர் 02 ஆம் திகதி அந்தந்த முன்பள்ளிகளில் கலை கண்காட்சிகளை ஏற்பாடு செய்யப்பட்டன.

மேற்கு கடற்படைக் கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தி சேவா வனிதா பிரிவின் செயற்குழு உறுப்பினர் திருமதி குமாரி வீரசிங்க, கிழக்கு கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்குழு உறுப்பினர் திருமதி திலினி பெரேரா, வட மத்திய கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தி கட்டளையின் செயற்குழு உறுப்பினர் திருமதி கங்கா டயஸ் மற்றும் தெற்கு கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தி கட்டளையின் செயற்குழு உறுப்பினர் திருமதி மாலா லமாஹேவா இந்த நிகழ்வுகளில் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் தெற்கு கடற்படை கட்டளையில் நடைபெற்ற விழாவில் கட்டளைத் தளபதியும் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், முன் பள்ளிகள் அமைந்துள்ள கடற்படை நிறுவனங்களின் கட்டளை அதிகாரிகள், முன்பள்ளி மேற்பார்வையாளர்கள் மற்றும் முன்பள்ளி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், செயற்குழு உறுப்பினர் திருமதி மாலா லமாஹேவா அவர்கள் தெற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான முன்பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்காக முன்பள்ளி நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கினார். கலை கண்காட்சியின் முடிவில் பிரதம அதிதிகள் உட்பட விருந்தினர்கள் குழந்தைகளின் கலைத் திறமைகளைப் பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளை வழங்கினர்.


බටහිර


නැගෙනහිර


උතුරු මැද


දකුණ