இரு புதிய சேவா வனிதா யோகட் திட்ட கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் கிழக்கு கடற்படைக் கட்டளையில் இடம்பெற்றது

கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா மற்றும் விதுர நிருவனங்களில் கட்டப்படவுள்ள இரண்டு புதிய சேவா வனிதா யோகட் திட்ட கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், 2020 நவம்பர் 04 ஆம் திகதி கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சந்திமா உலுகேதென்ன தலைமையில் இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா மற்றும் விதுர நிறுவன வளாகத்தில் இடம்பெற்றது.

நவம்பர் 04 ஆம் திகதி வலகம்பா மற்றும் விதுர நிருவன வளாகத்தில் நடத்தப்பட்ட மத சடங்களுக்குப் பிறகு கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன கடற்படைக்குள் கடற்படை சேவா வனிதா பிரிவின் யோகட் தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த இரு புதிய சேவா வனிதா யோகட் திட்ட கட்டிடங்களுக்கு அடிக்கல் நட்டார். மேலும் சேவா வனிதா பிரிவின் தலைவின் கருத்துப்படி வலகம்பா நிருவனத்தில் கடற்படையினருக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் புதிய நலன்புரி நிலையம் ஒன்றை நிறுவுவதற்கு பொருத்தமான இடத்தை ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில், கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா மற்றும் விதுர நிருவன வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட யோகட் திட்டக் கட்டடங்களுக்கு அருகே மா மற்றும் தேங்காய் மரக்கன்றுகளையும் நட்டார்.

நாட்டில் தற்போதுள்ள சுகாதார மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்ட இந்த திட்டங்களுக்காக கடற்படை சேவா வனிதா பிரிவின் செயற்குழு உறுப்பினர் திருமதி திலினி பெரேரா, கிழக்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி, திருகோணமலை வடக்கு கடற்படை கட்டளை அதிகாரி, திருகோணமலை, தெற்கு கடற்படை கட்டளை அதிகாரி, இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா மற்றும் விதுர நிருவனங்களில் கட்டளை அதிகாரிகள் மற்றும் சேவா வனிதா உறுப்பினர்கள், மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் உள்ளிட்ட குறைந்த எண்ணிக்கையிலான மாலுமிகள் கலந்து கொண்டனர்.


වලගම්බා ආයතනයේ ඉදිකිරීමට යෝජිත නව සේවා වනිතා යෝගට් ව්‍යාපෘති ගොඩනැගිල්ල සඳහා මුල්ගල තැබීම


වලගම්බා ආයතනයේ ඉදිකිරීමට යෝජිත නව සේවා වනිතා සුභ සාධක වෙළඳසැල ස්ථාපිත කිරීම සඳහා සුදුසු ස්ථානයක් නිරීක්‍ෂණය


විදුර ආයතනයේ ඉදිකිරීමට යෝජිත නව සේවා වනිතා යෝගට් ව්‍යාපෘති ගොඩනැගිල්ල සඳහා මුල්ගල තැබීම