கடற்படை சேவா வனிதா பதிக் மற்றும் மலர் அலங்கார பிரிவின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கப்பட்டது

இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்துப்படி சேவா வனிதா பிரிவின் கீழ் செயல்படும் சேவா வனிதா பதிக் மற்றும் மலர் அலங்கார பிரிவினால் வழங்கப்படுகின்ற சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிறுவன வளாகத்தில் சேவா வனிதா பதிக் மற்றும் மலர் அலங்கார பிரிவுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத்தை சேவா வனிதா பிரிவின் தலைவி 2021 ஏப்ரல் 01 ஆம் திகதி வெலிசர இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிறுவன வளாகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் ஆதரவின் கீழ் திறந்து வைத்தார்.

இந்த திறப்பு விழாவுக்காக கடற்படைத் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா, துணைப் தலைமை அதிகாரி மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன மற்றும் திருமதி அயோனி வேவிட அவர்கள், பணிப்பாளர் நாயகம் பொருட்கள் மற்றும் சேவைகள் ரியர் அட்மிரல் உதய ஹெட்டியாரச்சி, மின் மற்றும் மின்னணு பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் நிஷாந்த சமரசிங்க, பணிப்பாளர் நாயகம் சேவைகள் ரியர் அட்மிரல் சேனக செனவிரத்ன, சேவா வனிதா பிரிவின் நிர்வாக குழு உறுப்பினர்கள், கொடி அதிகாரிகள் மற்றும் பெண் அதிகாரிகள், மூத்த மற்றும் இளைய அதிகாரிகள், கடற்படை சேவா வனிதா பிரிவின் பணியாளர்கள் கழந்து கொண்டனர்.