நிகழ்வு-செய்தி

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO தனது உத்தியோகப்பூர்வ பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தீவிலிருந்து புறப்பட்டது

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, இன்று (2025 அக்டோபர் 31) தீவை விட்டுப் புறப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரால் இந்தக் கப்பலுக்கு பாரம்பரிய கடற்படை முறைப்படி பிரியாவிடை வழங்கப்பட்டது.

01 Nov 2025

மேற்குக் கடலில் கூட்டு கடற்படைப் பயிற்சிகளால் இலங்கை-ஜப்பான் கடற்படை ஒத்துழைப்பு வலுப்பெற்றது

இலங்கை மற்றும் ஜப்பானிய கடற்படை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டுப் புறப்பட்ட ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO, இன்று (2025 அக்டோபர் 31) மேற்குக் கடலில் இலங்கை கடற்படைக் கப்பலான சயுரவுடன் கூட்டு கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டது.

01 Nov 2025

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அனுராதபுரம் புனித பூமியில் கஞ்சுக பூஜை மற்றும் கொடி ஆசீர்வாத நிகழ்வுகள் நடைபெற்றது

2025 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படை கொடிக்கு ஆசிர்வாதம் பெறும் கொடி ஆசீர்வாத பூஜை மற்றும் கஞ்சுக பூஜை மகோற்சவம் 2025 நவம்பர் 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் அனுராதபுரம் புனித பூமியில் கடற்படை பௌத்த சங்கத்தின் அனுசரணையில் வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் தலைமையில் நடைபெற்றதுடன், இந்த நிகழ்வில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனுஷா பானகொடவும் கலந்து கொண்டார்.

31 Oct 2025

புத்தளம், செம்புகுலிய குளத்தின் செயலிழந்த மதகை பழுதுபார்க்க கடற்படை சுழியோடிகளின் பங்களிப்பு

புத்தளம், மஹகும்புக்கடவல, செம்புக்குளிய குளத்தின் செயலிழந்த மதகை பழுதுபார்த்து புனரமைப்பதற்காக கடற்படையினர் 2025 அக்டோபர் 27 ஆம் திகதி சுழியோடிகளின் உதவியை வழங்கியது.

31 Oct 2025

கடற்படையின் பெருமைமிகு 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வயங்கொடையில் ஒரு சிறப்பு நடமாடும் பல் மருத்துவமனை சிகிச்சை

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நடமாடும் பல் மருத்துவமனை சிகிச்சை 2025 அக்டோபர் 26 ஆம் திகதி வேயங்கொடை சிறிசுமன அறநெறிப் பாடசாலையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

31 Oct 2025

வணிக கடல் பாதுகாப்பு குழுக்களிடமிருந்து இலங்கை கடற்படைக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் கையகப்படுத்தப்பட்டது

தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உள்ளூர் முகவர்களின் பாதுகாப்பு குழுக்களுக்கு கடற்படை சுயாதீனமாக வசதிகளை வழங்கத் தொடங்கியுள்ளது. இதன் கீழ், வணிகக் கப்பல் பாதுகாப்பு குழுக்களிடமிருந்து பெறப்பட்ட முதல் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் பிற பாகங்கள் 2025 அக்டோபர் 30 ஆம் திகதி காலி, பெட்டிகலவத்தவில் உள்ள வணிகக் கப்பல் பாதுகாப்பு குழு ஆயுதக் கிடங்கு வளாகத்தில் கடற்படையிடம் பாதுகாப்பாக சேமித்து வைக்க ஒப்படைக்கப்பட்டன.

31 Oct 2025

மலேசிய கடலோர காவல்படை கப்பல் ‘KM BENDAHARA’ தீவை விட்டு புறப்பட்டது

மலேசிய கடற்படை போர்க்கப்பலான 'KM BENDAHARA' அதன் விநியோக மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்து இன்று (2025 அக்டோபர் 30) தீவை விட்டுப் புறப்பட்டது, மேலும் இலங்கை கடற்படை கொழும்பு துறைமுகத்தில் கப்பலுக்கு பாரம்பரிய முறையில் கடற்படையினர் பிரியாவிடையளித்தனர்.

31 Oct 2025

‘AKEBONO’ கப்பல் குழுவினர் இலங்கை கடற்படையுடன் இணைந்து கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தில் பங்கேற்றது

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தந்த ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான 'AKEBONO' இன் குழுவினர், இன்று (2025 அக்டோபர் 29,) காலை காலி முகத்திடலில் இலங்கை கடற்படையுடன் இணைந்து கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

29 Oct 2025

கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு தெற்கு கடற்படை கட்டளை மேற்கொண்ட மரம் நடும் திட்டம்

2025 டிசம்பர் 09 ஆம் திகதி கொண்டாடப்படும் இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட தீவு முழுவதும் மரம் நடும் திட்டத்தின் கீழ் தெற்கு கடற்படை கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடும் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

29 Oct 2025

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவுக்கு வருகை தந்தது

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான 'AKEBONO' இன்று (2025 அக்டோபர் 28,) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

28 Oct 2025