இந்திய நீரளவியல் கணக்கெடுப்பு கப்பல் இலங்கை வருகை
 

இந்திய கடற்படையின் நீரளவியல் கணக்கெடுப்பு கப்பலான ஐ என் எஸ் ஜமுனா நேற்று (டிசம்பர், 20) இலங்கை வந்தடைந்தது. இலங்கை கடலில் நீர்வளவியல் கணக்கெடுப்பை மேற்கொள்ளும் நோக்கில் இக்கப்பல் நாட்டிற்கு வந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த மேற்படி கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றுள்ளனர்.

குறித்த கப்பல் இங்கு தரித்திருக்கும் வேளையில், கொழும்பிலிருந்து காலி வரையிலான கடற்பரப்பை உள்ளடக்கியதாக ஒரு இணைந்த நீர்வளவியல் கணக்கெடுப்பை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது,. இக்கப்பல் 85.77 மீட்டர் நீளம் மற்றும் 12.82 மீட்டர் அகலத்தைக் கொண்டுள்ளதுடன், 230 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.