நிகழ்வு-செய்தி

ஜப்பான் கடல்சார் தற்காப்பு படைக்கு சொந்தமான கப்பலொன்று ஹம்பாண்தோட்டை துறைமுகத்துக்கு வருகை

ஜப்பான் கடல்சார் தற்காப்பு படைக்கு சொந்தமான "செடொகிரி” (Setogiri) எனும் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு 2021 பிப்ரவரி 25 ஆம் திகதி ஹம்பாண்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

26 Feb 2021

கடற்படை பங்களிப்புடன் காலி, இமதூவ பரகொட ஸ்ரீ குணரத்ன முதன்மை பாடசாலைக்கு நூலக கட்டிடம்

கடற்படையின் பங்களிப்புடன் காலி, இமதூவ பரகொட ஸ்ரீ குணரத்ன முதன்மை பாடசாலையில் மானவர்களுக்காக கட்டப்பட்ட புதிய நூலக கட்டிடம் 2021 பிப்ரவரி 25 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

26 Feb 2021

இலங்கை கடற்படை கப்பல் தீகாயு நிறுவனத்தில் கட்டப்பட்ட புதிய இளைய கடற்படையினர் விடுதி திறக்கப்பட்டது

இலங்கை கடற்படை கப்பல் தீகாயு நிறுவனத்தில் கட்டப்பட்ட புதிய இளைய கடற்படையினர் விடுதி தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜெயந்த கமகே 2021 பிப்ரவரி 24 அன்று திறந்து வைத்தார்.

26 Feb 2021

கடற்படை தாதி கல்லூரியில் பாடநெறி முடித்த 44 தாதி மாணவர்கள் தாதி உறுதிமொழி வழங்கினார்கள்

சர் ஜான் கோத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்த வெலிசர இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷிலா நிறுவனத்தில் நிருவப்பட்ட கடற்படை தாதி கல்லூரியில் 2019 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பின் 44 கடற்படை மற்றும் விமானப்படை தாதிகளின் பதவியேற்பு விழா இன்று (2021 பிப்ரவரி 25) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிறுவனத்தில் இடம்பெற்றது.

25 Feb 2021

வைத்தியசாலை பணி பகிஷ்கரிப்பின் போது அத்தியவசிய சேவைகளுக்கு கடற்படையின் உதவி

வைத்தியசாலை சிற்றூழியர்களின் பணி பகிஷ்கரிப்பு காரணத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற சிரமத்தைத் தவிர்க்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை கடற்படையின் கடற்படை மருத்துவப் பிரிவு உறுப்பினர்கள் உட்பட கடற்படையினர் நாட்டின் பல பகுதிகளில் வைத்தியசாலைகளின் நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தப்பட்டனர்.

25 Feb 2021

கடற்படையால் கட்டப்பட்ட 821 வது நீர் சுத்திகரிப்பு நிலையம் மெல்சிரிபுர, உமந்தாவ மஹா விஹாரய பகுதியில் திறக்கப்பட்டது

சுகாதார அமைச்சின் அனுசரணையிலும், கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் மனிதவளம் உதவியுடனும் கட்டப்பட்ட 821 வது நீர் சுத்திகரிப்பு நிலையம் மெல்சிரிபுர, உமந்தாவ மஹா விஹாரய ஆசிரம வளாகத்தில் இன்று (2021 பிப்ரவரி 24) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் திறந்து வைக்கப்பட்டன.

24 Feb 2021

கடற்படையால் முதல் முறையாக கப்பல்களுக்காக கடல் நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்றை நிர்மாணிக்கப்பட்டன

கடற்படை சமூக பணி திட்டத்தினால் முதல் முறையாக கப்பல்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகரவில் நிறுவப்பட்ட கடல் நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை (Sea water Reverse Osmosis Plant) இன்று (2021 பிப்ரவரி 24) வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரியவினால் திறந்து வைக்கப்பட்டன.

24 Feb 2021

இலங்கை கடற்படை கடலாமை பாதுகாப்பு திட்டத்தால் 78 கடலாமை குட்டிகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டன

இலங்கை கடற்படை கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற தென்கிழக்கு கடற்படை கட்டளையின் பானம கடலாமை பாதுகாப்பு மையம் மூலம் 78 கடலாமை குட்டிகள் 2021 பிப்ரவரி 21 அன்று கடலுக்கு விடுவிக்கப்பட்டன.

22 Feb 2021

காலி, வக்வெல்ல பாலத்தைச் சுற்றியுள்ள குப்பை கூளங்கள் அகற்ற கடற்படை பங்களிப்பு

கின்தோட்டை பகுதியூடாக கடலுக்கு செல்லும் கின் கங்கை குறுக்கே வக்வெல்ல பகுதியில் உள்ள குறுகிய பாலத்தில் நீரினை தடுக்கும் வகையில் குவிந்து காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணிகளில் கடற்படை தொடர்ந்து பங்களித்து வருகிறது. அதன் படி 2021 பிப்ரவரி 20 அன்று வக்வெல்ல பாலத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட குப்பைகளை அகற்ற கடற்படை மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது.

22 Feb 2021

யுத்தத்தின் போது ஊனமுற்ற வீரர்களுக்காக “மிஹிந்து செத் மெதுரவில்” நடத்தப்பட்ட சிறப்பு இரவு விருந்து நிகழ்வில் கடற்படைத் தளபதி பங்கேற்பு

யுத்தத்தின் போது ஊனமுற்ற வீரர்களின் நலனுக்காக இலங்கை இராணுவத்தால் பராமரிக்கப்படுகின்ற மிஹிந்து செத் மெதுர நிலையத்தில் தங்கி இருக்கும் ஊனமுற்ற இராணுவ உறுப்பினர்களுக்காக பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு நடத்திய சிறப்பு இரவு விருந்து 2021 பிப்ரவரி 20 ஆம் திகதி பாதுகாப்பு செயலாளர், ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணரத்ன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன கழந்து கொண்டனர்.

21 Feb 2021