நிகழ்வு-செய்தி

பானமவில் கடற்படையினரால் நீர் சறுக்கல் விளையாட்டு கிளப் திறந்து வைப்பு

இலங்கை கடற்படை அண்மையில் பானமவில் ஒரு புதிய நீர் சறுக்கல் விளையாட்ட கிளப்பை நிறுவியுள்ளது. பானம கடற்கரையில் நிறுவப்பட்ட இந்த புதிய வசதிகள், தென்கிழக்கு கடற்படைப் பிராந்திய கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த கமகேவினால் இம்மாதம் 25ம் திகதி வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

27 Oct 2021

வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படையினரால் ஸ்தாபிப்பு

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்றைய தினம் (ஒக்டோபர் 25) பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

25 Oct 2021

இந்திய கடற்படை கப்பல்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து இருதரப்பு கடற்படை கூட்டுப் பயிற்சியினை தொடங்குகிறது

இந்திய கடற்படையைச் சேர்ந்த 01வது பயிற்சிப் படைக் கப்பல்கள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து இருதரப்பு கடற்படை கூட்டுப் பயிற்சியினை முன்னெடுப்பதற்காக நேற்றைய தினம் (ஒக்டோபர்,24) இலங்கை வந்தடைந்தன.

24 Oct 2021

இலங்கை கடற்படை கப்பல் 'சமுதுர' எச்எம்எஸ் 'கென்ட்' கப்பலுடன் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்பு

எரிபொருள் நிரப்பும் தேவைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்திருந்த ரோயல் கடற்படை படைக்குச் சொந்தமான வகை 23 ரக ஹேர் மெஜஸ்டிஸ் 'கென்ட்' போர்க்கப்பல், இலங்கை கடற்படையினருடன் இணைந்து மேற்கொண்ட பயிற்சிகளின் பின்னர் நேற்றைய தினம் (ஒக்டோபர் 24) கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

24 Oct 2021

யாழில் உள்ள சதுப்புநில பகுதியில் கடற்படையினரால் 5,000 கண்டல் தாவரங்கள் நடுகை

யாழ் குடாநாட்டில் 5,000 கண்டல் தாவரங்களை நடுகை செய்ய கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்த திட்டம் அண்மையில் பொன்னாலை சதுப்புநிலப் பகுதியில் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.

19 Oct 2021

ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

ஜப்பானிய கடற்படைக்கு சொந்தமான ககா, முரசமே மற்றும் பியுசுகி ஆகிய 3 நாசகாரி கப்பல்கள் இன்றைய தினம் (ஒக்டோபர் 02) நாட்டிற்கு வருகை தந்துள்ளன. இதற்கமைய, ஜப்பானிய கடற்படைக்கு சொந்தமான குறித்த கப்பல்கள் நல்லெண்ணெ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை வந்த அடைந்துள்ளது.

02 Oct 2021