93 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கஞ்சா கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன

2020 ஏப்ரல் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், வெத்தலகேனி, கடெய்காடு தெற்கு கரைக்கு கடலில் இருந்து தரையிறக்க முயன்ற 93 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சாவுடன் இரண்டு நபர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

23 Apr 2020

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட வணிகக் கப்பலில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது இறந்த நபரின் சடலத்தை கொண்டு வர கடற்படை உதவி

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட வணிகக் கப்பலான ‘MV GRACE’ கப்பலில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, மாரடைப்பால் திடீரென இறந்த நபரின் சடலத்தை கப்பலில் இருந்து இறக்குவதற்கும், அதை கப்பல் நிறுவனத்தின் உள்ளூர் முகவரிடம் ஒப்படைப்பதற்கும் இன்று (2020 ஏப்ரல் 22). இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

22 Apr 2020

Colombo International Container Terminals (CICT) நிறுவனம் மூலம் கடற்படைக்கு பாதுகாப்பு முகமூடிகள் நன்கொடையாக வழங்கப்பட்டது

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக Colombo International Container Terminals நிறுவனம் பல பாதுகாப்பு முகமூடிகள் இன்று (2020 ஏப்ரல் 22) கடற்படை கலங்கரை விளக்கம் உணவகத்தில் வைத்து கடற்படைக்கு நன்கொடையாக வழங்கியது.

22 Apr 2020

தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் தொடர் இன்னிசை நிகழ்ச்சிகள்

கொழும்பு பகுதியில் மாடி கட்டடங்களில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் கவலை மற்றும் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் இன்னிசை நிகழ்ச்சி தொடரின் மேலும் ஒரு இசை நிகழ்ச்சி 2020 ஏப்ரல் 21 ஆம் திகதி கம்பஹ பகுதி மையமாகக் கொண்டு இடம்பெற்றது.

22 Apr 2020

சவுக்காடி கடற்கரையில் இருந்து RPG ரவையொன்று கடற்படையால் கண்டு பிடிக்கப்பட்டன

2020 ஏப்ரல் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம், மணிப்பாய் சவுக்காடி கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கடற்படை RPG ரவையொன்று கண்டுபிடித்தது.

22 Apr 2020

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் கடற்படையினரால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து (05) நபர்கள் 2020 ஏப்ரல் 21 ஆம் திகதி மூந்தலம களப்பு, உடப்புவ பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்துப் பணியின் பொது கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

22 Apr 2020

இத்தாலி நோக்கி பயணித்த MSC Magnifica என பயணிகள் கப்பலில் பணியாற்றிய அனுர பண்டார ஹேரத் மற்றும் மேலும் இரண்டு நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் வீடு திரும்பிச் சென்றனர்.

MSC Magnifica என பயணிகள் கப்பலில் பணியாற்றிய போது 2020 ஏப்ரல் 06 ஆம் திகதி கடற்படையினரால் கரைக்கு அழைத்து வரப்பட்ட அனுர பண்டார ஹேரத் அவர்கள் மற்றும் மேலும் இரண்டு நபர்கள் (02) புஸ்ஸ கடற்படை முகாமில் நிருவப்பட்ட தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்து 2020 ஏப்ரல் 21 ஆம் திகதி தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

22 Apr 2020

தனியார் நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புகளால் ஒலுவில் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு பாதுகாப்பு மருத்துவ ஆடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன

ஒலுவிலில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தும் மையத்தில் பணியாற்றும் கடற்படைப் பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மருத்துவ உடைகள், கஹதுடுவ Hydramani Pentex நிறுவனம் மற்றும் The Fight Against Corona Team’ அமைப்பு ஆகியவற்றால் 2020 ஏப்ரல் 21 ஆம் திகதி தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தலைமையகத்தில் வைத்து கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

21 Apr 2020

தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் தொடர் இன்னிசை நிகழ்ச்சிகள்

கொழும்பு பகுதியில் மாடி கட்டடங்களில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் கவலை மற்றும் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் இன்னிசை நிகழ்ச்சி தொடரின் மேலும் ஒரு இசை நிகழ்ச்சி 2020 ஏப்ரல் 20 ஆம் திகதி மஹர, கடவத்தை பகுதி மையமாகக் கொண்டு இடம்பெற்றது.

21 Apr 2020

கடற்படையால் நிர்மானிக்கப்பட்ட மருத்துவ ஊழியர்களுக்கான சுகாதார ஆடைகள் தொகுப்பு பொது சேவை ஐக்கிய செவிலியர் சங்கத்திற்கு ஒப்படைக்கப்பட்டது

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான 150 மருத்துவ உடைகளை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் பொது சேவை ஐக்கிய செவிலியர் சங்கத்தின் தலைவர் முருத்தெத்துவே ஆனந்த தேரரிடம் இன்று (2020 ஏப்ரல் 21) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டன.

21 Apr 2020