நிகழ்வு-செய்தி

கடற்படை பேலியகொடை மீன் சந்தையில் கிருமி நீக்கும் திட்டமொன்று மேற்கொண்டுள்ளது.

கடற்படை இன்று (2020 ஏப்ரல் 21) பேலியகொடை மீன் சந்தையில் அனைத்து இடங்களும் உள்ளடக்கி கிருமி நீக்கும் திட்டமொன்று மேற்கொண்டுள்ளது.

21 Apr 2020

சட்டவிரோத போதைப்பொருட்களுடன் 06 நபர்கள் கைது செய்ய கடற்படை உதவி

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் அதே வேளையில், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கவும் இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக, 2020 ஏப்ரல் 20 அன்று தெற்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளில் மேற்கொள்ளப்பட்ட மூன்று நடவடிக்கைகளின் போது சட்டவிரோத போதைப்பொருட்களுடன் 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

21 Apr 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவருடன் தொடர்பு கொண்டிருந்த மேலும் ஒரு நபர் (01) தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டார்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவருடன் தொடர்பு கொண்டிருந்த ஜா-எல பகுதியில் வசிக்கும் ஒரு நபர் 2020 ஏப்ரல் 20 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்ப கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

21 Apr 2020

கடற்படை மேலும் பல கிருமி நீக்கும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது

நாட்டில் 'புதிய கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட பல கிருமி நீக்கும் திட்டங்கள் 2020 ஏப்ரல் 19 மற்றும் 20 திகதிகளில் ராகமை வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலை, மஹவ மற்றும் காலி ரயில் நிலையங்கள் ஆகிய இடங்கள் மையப்படுத்தி இடம்பெற்றது.

21 Apr 2020

தடைசெய்யப்பட்ட பல வலைகள் கடற்படையினரால் கைது

நிலாவேலி மற்றும் மட்டக்களப்பு பகுதியில் ஏப்ரல் 19 மற்றும் 20 திகதிகளில் கடற்படை மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போது ஏராளமான சட்டவிரோத வலைகளை கடற்படை கைப்பற்றியது.

21 Apr 2020

கடலில் விரிக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையொன்று கடற்படை கண்டுபிடித்துள்ளது

2020 ஏப்ரல் 19 ஆம் திகதி திருகோணமலை துறைமுக கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் பணியின் போது, கடலில் விரிக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையொன்று கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது.

20 Apr 2020

தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் தொடர் இன்னிசை நிகழ்ச்சிகள்

கொழும்பு பகுதியில் மாடி கட்டடங்களில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் கவலை மற்றும் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் இன்னிசை நிகழ்ச்சி தொடரின் மேலும் ஒரு இசை நிகழ்ச்சி 2020 ஏப்ரல் 19 ஆம் திகதி கொட்டாவை மற்றும் பனாகொடை பகுதியில் மாடி வீடு கட்டிடங்கள் மையமாகக் கொண்டு இடம்பெற்றது.

20 Apr 2020

கடற்படை காவல்துறையினருடன் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது கேரள கஞ்சா மற்றும் ஹெரொயின் கொண்ட நாங்கு (04) நபர்கள் கைது செய்யப்பட்டனர்

தலைமன்னார் இறங்குதுறையில் 2020 ஏப்ரல் 19 அன்று கடற்படை காவல்துறையினருடன் மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த தேடலின் போது கேரள கஞ்சா மற்றும் ஹெரொயின் கொண்ட நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

20 Apr 2020

கடற்படை நிர்மானித்த மற்றொரு கிருமிநாசினி அறை தென்கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

கடற்படையால் நிர்மானிக்கப்பட்ட மேலும் ஒரு கிருமிநாசினி அறை 2020 ஏப்ரல் 19 ஆம் திகதி தென்கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் நிறுவப்பட்டது.

20 Apr 2020

கஞ்சா கொண்ட ஒரு பெண் மற்றும் இரண்டு நபர்கள் கடற்படையினரால் கைது

2020 ஏப்ரல் 18 ஆம் திகதி தங்காலை பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் பணியின் போது கடற்படை ஒரு பெண் மற்றும் இரண்டு நபர்களைக் கஞ்சாவுடன் கைது செய்தது.

19 Apr 2020