கொழும்பு கடற்படை பயிற்சி - CONEX 2021 இன் மூன்றாம் பதிப்பின் இறுதி நாள் கடற்படை தளபதியின் மேற்பார்வையில்

இலங்கை கடற்படை மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்த கொழும்பு கடற்படை பயிற்சி - 2021 (Colombo Naval Exercise –CONEX 21) 2021 பிப்ரவரி 10 அன்று வெற்றிகரமாக நிரைவடைந்தது, மேலும் பயிற்சியின் கடைசி நாளான 2021 பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற பயிற்சியை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மேற்பார்வையிட்டார்.

11 Feb 2021

காலி முகத்திடலில் அபிவிருத்தி திட்டங்களுக்காக கடற்படையின் பங்களிப்பு

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ள காலி முகத்திடம் பகுதியில் Galle Face Green Project கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை இன்று (பிப்ரவரி 08, 2021) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பார்வையிட்டார். /p>

08 Feb 2021

கொழும்பு கடற்படை பயிற்சியின் (CONEX) மூன்றாவது தொகுதி தொடங்கப்பட்டது

இலங்கை கடற்படை மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்யும் கொழும்பு கடற்படை பயிற்சி - 2021 (Colombo Naval Exercise –CONEX 21) தொடக்க விழா இன்று (2021 பிப்ரவரி 07) இலங்கை கடற்படைக் கப்பல் சயுரலவில் நடைபெற்றது. குறித்த கடற்படை பயிற்சி 2021 பிப்ரவரி 08 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை கொழும்பு கடல் பகுதியை மையமாகக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் பயிற்றுவித்தல் மற்றும் சீராக செயல்படுத்துதல் ஆகியவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பு அடுத்த மூன்று நாட்களில் கடற்படை வெளியீட்டு கட்டளைக்கு வழங்கப்பட்டுள்ளது.

07 Feb 2021

கடற்படையால் அம்பாரை பகுதியில் கட்டப்பட்ட நாங்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டது

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் சமூக நல திட்டங்களின் ஒரு பகுதியாக அம்பாரை, பதியதலாவ பிரதேச செயலக பிரிவில் புதிதாக கட்டப்பட்ட நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2021 பிப்ரவரி 04 அன்று பொதுமக்களுக்காக திறந்துவைக்கப்பட்டன. குறித்த நிலையங்களுடன் சமூகத்தின் பாதுகாப்பான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மொத்தம் 817 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கடற்படையால் நிறுவப்பட்டன.

06 Feb 2021

இந்தோனேசிய கடற்படைக் கப்பல் ஹம்பாண்தோட்டை துறைமுகத்துக்கு வருகை

இந்தோனேசிய கடற்படையின் " KRI Bung Tomo "எனும் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (2021 பிப்ரவரி 05) ஹம்பாண்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

05 Feb 2021

73 வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இணையாக காலி முகத்திடத்தில் கடற்படை கண்காட்சிகள்

73 வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இணையாக இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்படை கண்காட்சியொன்று 2021 பிப்ரவரி 04 அன்று காலி முகத்திடத்தில் தொடங்கியது.

05 Feb 2021

25 துப்பாக்கி சூடு மரியாதையுடன் இலங்கை கடற்படை 73 வது சுதந்திர தினத்தன்று தேசத்திற்கு அஞ்சலி செலுத்தியது

73 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு மரியாதையுடன் தேசத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (2021 பிப்ரவரி 04) இலங்கை கடற்படை கப்பல் சமுதுரவில் மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை கடற்படை கப்பல் சமுதுரவின் ஆயுத அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் கசுன் பிரகீத்வினால் மேற்கொள்ளப்பட்டது. இந் நிகழ்வுக்காக கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் சமிந்த கருனாசேன மற்றும் நிர்வாக அதிகாரி பன்டார வாஹல ஆகியோர் கலந்து கொண்டனர்.

04 Feb 2021

73 வது தேசிய சுதந்திர தினத்தில் கடற்படை பெருமையுடன் பங்கேற்கிறது

73 ஆவது சுதந்திர தின விழா இன்று (2021 பெப்ரவரி 04) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவரும், ஆயுதப்படைகளின் தளபதியுமான அதிமேதகு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றதுடன் இவ் நிகழ்வில் கடற்படை பெருமையுடன் பங்கேற்றது.

04 Feb 2021

தென்கிழக்கு கடற்படை கட்டளை மூலம் பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கல்

தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜெயந்த கமகேவின் தலைமையில் அம்பாரை பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது.

01 Feb 2021