கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன 2021 ஏப்ரல் 03 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவும் இணைந்துள்ளார்.

05 Apr 2021

நயினாதீவு ரஜமஹா விஹாரயத்தில் நிர்மானிக்கப்பட்ட பிராக்மனவத்தே தம்மகித்தி திஸ்ஸ தேரர் நினைவு ஓய்வு இல்லம் கடற்படை தளபதியால் திறந்து வைக்கப்பட்டது

கடற்படையின் பங்களிப்புடன் நயினாதீவு பண்டைய ராஜமஹா விஹாராயத்தில் கட்டப்பட்ட பிராக்மனவத்தே தம்மகித்தி திஸ்ஸ தேரர் நினைவு மூன்று மாடி ஓய்வு இல்லத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (2021.ஏப்ரல் 03) திறந்து வைத்தார். இந் நிகழ்வில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவும் கழந்துகொண்டார்.

03 Apr 2021

ஹிம்புடான ஸ்ரீ அபினவாராம விஹாரயத்தில் நிர்மானிக்கப்பட்ட புதிய 'தாது மந்திரய' கடற்படைத் தளபதியால் திறந்து வைக்கப்பட்டது

கடற்படையினரால் ஹிம்புடான ஸ்ரீ அபினவாராம விஹாரயத்தில் நிர்மானிக்கப்பட்ட புதிய 'தாது மந்திரய' இன்று (2021 ஏப்ரல் 02) கடற்படைத் தளபதியால் திறந்து வைக்கப்பட்டது.

02 Apr 2021

ஹன்வெல்ல, நிரிபொல ரோமன் கத்தோலிக்க முதன்மை கல்லூரியின் புதுப்பிக்கும் நடவடிக்கைகளுக்காக கடற்படை பங்களிப்பு

இலங்கை கடற்படையின் மற்றொரு சமூக சேவையாக, கடற்படை பங்களிப்புடன் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் டாக்டர் மிரான் சல்காதுவின் நிதி உதவியுடன், ஹன்வெல்ல, நிரிபொல ரோமன் கத்தோலிக்க முதன்மை கல்லூரியில் நிர்மானிக்கப்பட்ட குழந்தைகள் விளையாட்டு மைதானமொன்று மற்றும் புதுப்பிக்கப்பட்ட பிற இடங்கள் மார்ச் 29 அன்று திறந்துவைக்கப்பட்டது.

01 Apr 2021