கடற்படையினரால் வடக்கு கடலில் சட்டவிரோத போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது

பருத்தித்துறைக்கு 22 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் 2020 ஆகஸ்ட் 11 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது கேரள கஞ்சா என அழைக்கப்படும் போதைப்பொருள் கடற்படை கைப்பற்றியது.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் மற்றும் மனித கடத்தலைத் தடுப்பதற்காக இலங்கை கடற்படை தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமான கப்பல்கள் மீது நடத்தி வருகிறது. தற்போதுள்ள உளவுத்துறையின் அடிப்படையில், சட்டவிரோத கடத்தல்களை தடுக்கும் நடவடிக்கைகள் நிலம் மற்றும் கடல் இரண்டையும் கூட்டாக உள்ளடக்கி துணைத் தலைமை பணியாளர் மற்றும் வடக்கு கடற்படை கட்டளை தளபதியின் மேற்பார்வையின் கீழ் வடக்கு கடற்படை கட்டளையால் செயல்படுத்தப்படுகிறது. அதன் படி, துரித தாக்குதல் ரோந்து படகுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மற்றொரு வெற்றிகரமான கடற்படை நடவடிக்கை மூலம் கடத்தல்காரர்கள் கடல் வழியாக தரையிறக்க போதைப் பொருட்களை கொண்டு வருவதற்கான முயற்சியொன்று தோல்வியடைந்துள்ளது. பருத்தித்துறைக்கு வடக்கே சுமார் 22 கடல் மைல் (சுமார் 40 கி.மீ) தொலைவில் உள்ள கடலில் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட ஆறு (06) சாக்குகளில் நிரம்பிய கேரள கஞ்சா எனப்படும் போதைப்பொருட்களை இவ்வாரு கடற்படை கைப்பற்றியது. கடற்படை கைப்பற்றிய போதைப்பொருட்களின் ஈரமான எடை 275 கிலோகிராமுக்கு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கோவிட் -19 தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் சரியான கருத்தடை செயல்முறைக்குப் பின்பற்றிய பிறகு, பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதற்கிடையில், இந்த மோசடியில் ஈடுபட்ட போதைப்பொருள் பரிமாற்றக் கப்பல் மற்றும் கடத்தல்காரர்களைத் தேடும் கடற்படை நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.