துப்பாக்கியுடன் ஒரு நபரை கைது செய்ய கடற்படையின் உதவி

தீவில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதை சீர்குலைக்கும் வகையில் நடைபெறுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கடற்டையினர் 2020 ஆகஸ்ட் 14, அன்று, சட்டவிரோத துப்பாக்கியொன்றுடன் ஒரு நபரை கைது செய்தனர்.

தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் அம்பலன்தோட்டை பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஒருங்கிணைந்து ஹம்பான்தோட்டை மஹஹெபில்ல கொன்னோருவ பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது அனுமதி பத்திரிக்கை இல்லாமல் வைத்திருந்த துப்பாக்கியுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அதே பகுதியில் வசிக்கும் 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் துப்பாக்கியை மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.