சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் மீன்பிடி பொருட்கள் கடற்படையால் கைது

கடற்படை, கடந்த வாரத்தில் நடத்திய சிறப்பு நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பல நபர்களை மீன்பிடி உபகரணங்களுடன் கைது செய்தது.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக கடல் சுற்றுச்சூழல் மற்றும் அதன் பல்லுயிர் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க கடற்படை தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி, கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நிலாவேலி புறா தீவு, மட்டக்களப்பு கொடுவமட களப்பு, திருகோணமலை நோர்வே தீவு, நதிதீவு மற்றும் சாம்பூர் ஆகிய கடல் பகுதிகளிலும், வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் தாலடி கடல் பகுதியிலும், வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் தலைமன்னார் இருக்குலம்பிட்டி கடல் பகுதியிலும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் போது செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட, சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மற்றும் சட்டவிரோத நீர்முழ்கி நடவடிக்கைகள் மூலம் மீன்பிடியில் ஈடுபட்ட திருகோணமலை, எரக்கண்டி, கின்னியா, வெல்லை மனால், முத்தூர், மன்னார் மற்றும் இருக்குலம்பிட்டி பகுதிகளில் வசிக்கின்ற 31 நபர்கள், 09 டிங்கி படகுகள் மற்றும் பல மீன்பிடி பொருட்கள் கைது செய்தனர்.

இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர்கள் மீன்பிடி பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மீன்வள உதவி இயக்குநர்களிடம் மற்றும் நிலாவேலி, முத்தூர், குச்சவேலி, மன்னார் மற்றும் பருத்தித்துறை மீன்வள ஆய்வாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.