செய்தி வெளியீடு


2020 செப்டம்பர் 04 அன்று 1600 மணிக்கு “பனமா கொடி கொண்ட New Diamond எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ” தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது

எம்டி நியூ டயமண்ட் (MT New Diamond) என்ற எரிபொருள் கப்பலில் தீ கட்டுப்பாடு நடவடிக்கைகள் மிகவும் வெற்றிகரமாக நடைபெறுகின்றதுடன் குறித்த கப்பல் அதிகாலை 5.30 மணிக்கு 35 கடல் மைல் தொலைவில் உள்ளது. ஒருங்கிணைந்த செயல்பாட்டின் விளைவாக, கப்பல் எல்லா பக்கங்களிலும் பாதுகாக்கப்பட்டது, மேலும் கப்பல் நேற்று (2020 செப்டம்பர் 4,) 1800 மணிக்கு சுமார் 20 கடல் மைல் தூரத்தில் இருந்தாலும் அந்த நேரத்தில் கப்பலின் தீ நன்றாக கட்டுப்படுத்தி இருந்ததால் ALP Winger டக் படகு, கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்லும் பணியைத் தொடங்கியது.

மேலும், இந்த ஒருங்கிணைந்த பேரழிவு நிவாரண நடவடிக்கையில் இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக ஆணையம், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. இந்திய கடலோர காவல்படை கப்பல் (ஐ.சி.ஜி.எஸ்) சாரங், (ICGS Sarang) ஐ.சி.ஜி.எஸ் சுஜய், (ICGS Sujay) தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்முறை தீயணைப்பு வீரர்கள் பொருத்தப்பட்ட டி.டி.டி ஒன் – டக் படகு, இந்திய கடலோர காவல்படையின் 02 டோர்னியர் விமானங்கள் முந்தைய இரவு முதல் இந்த பேரழிவு நிவாரண நடவடிக்கையில் புதிதாக இணைந்தன. இப்போது தீ பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் டோர்னியர் விமானம் தற்போது மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், இந்த அவசரநிலை காரணத்தினால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கிய தீ அணைக்கும் ரசாயனங்களை ஏற்றிச் செல்லும் இலங்கை கடற்படையின் சமுதுர கப்பல், பி 4442 துரித தாக்குதல் கப்பல், இலங்கை கடலோர காவல்படையின் சமுத்ராரக்‌ஷா மற்றும் சமாரக்‌ஷா கப்பல்களும் இந்த செயல்பாட்டில் சேர்ந்து தேவையான ஆதரவை வழங்குகின்றன.

அதன்படி, இலங்கை கடற்படைக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் (03) மற்றும் மூன்று துரித தாக்குதல் கப்பல்கள் (03), இலங்கை கடலோர காவல்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் (02), இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் (03), இந்திய கடற்படைக்கு சொந்தமான ஒரு கப்பல், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுவின் இராவணா மற்றும் வசம்ப டக் படகுகள், பாதிக்கப்பட்டுள்ள கப்பலின் வெளிநாட்டு நிறுவனம் தயாரித்த ALP Winger டக் படகு, ஆழ்கடல் தீயணைப்பு வீரர்கள் கொண்ட டி.டி.டி 1 (TTT One) டக் படகு (01) இந்த தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், இலங்கை விமானப்படையின் எம்ஐ 17 ஹெலிகாப்டர் மற்றும் பீச் கிராஃப்ட் ஆகியவை இன்று காலை முதல் மீன்டும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும், பேரழிவு நிவாரண நடவடிக்கையின் தொடர்ச்சியான குளிரூட்டும் விளைவு காரணமாக எம்டி நியூ டயமண்ட் (MT New Diamond) கப்பலில் ஏற்பட்ட தீ, அதன் கச்சா எண்ணெய் சேமிப்பு பகுதிக்கு பரவுவதைக் கட்டுப்படுத்தியுள்ளது, எனவே இதுவரை எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம் இல்லை.