சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட சுமார் 815 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

சட்டவிரோதமாக கடல் வழியாக இந்நாட்டுக்கு கொண்டுவர முட்பட்ட 815 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் தொகையை இன்று (2020 செப்டம்பர் 06) கற்பிட்டி, எத்தாலே பகுதியில்கடற்படையினர் கைது செய்தனர்.

கடற்படை கற்பிட்டி எத்தாலே பகுதியில் நடத்திய இந்த சிறப்பு நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடல் வழியாக இந்நாட்டுக்கு கொண்டுவந்து 30 சாக்குகளில் அடைத்து வைக்கப்பட்ட 815 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர், அங்கு சந்தேக நபர்களுடன் ஒரு சிறிய லாரியையும் கடற்படை கைப்பற்றியது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர்கள் 24 முதல் 31 வயது வரை அதே பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போதைய COVID-19 தொற்று சூழ்நிலையில் சுகாதாரத் துறை வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் உலர்ந்த மஞ்சள் மற்றும் லாரி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.