செய்தி வெளியீடு


New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது

MT New Diamond என்ற கச்சா எண்ணெய் கப்பல் குவைத்தின் மீனா அல் அஹ்மதி துறைமுகத்திலிருந்து இந்தியாவின் பாரதீப் துறைமுகத்திற்கு 270,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை கொண்டு சென்று கொண்டிருந்த பொது 2020 செப்டம்பர் 3, அன்று காலை 0800 மணியளவில் இலங்கைக்கு கிழக்குக் கடலில் தீ விபத்துக்குள்ளாகியது. அந்த நேரத்தில், கப்பல் சங்கமங்கந்த பகுதியில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் பயணித்தபோது, கப்பலின் பிரதான இயந்திர அறையில் உள்ள ஒரு கொதிகலனில் வெடிப்பில் இந்த தீ ஏற்பட்டுள்ளது.

இந்த பேரழிவு அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்து கிட்டத்தட்ட 79 மணி நேரத்தில், இலங்கை கடற்படை மற்றும் பிற பங்குதாரர்களின் கடுமையான தீயணைப்பு முயற்சியின் விளைவாக இன்று மாலை 1500 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.

சர்வதேச அளவில் சிறப்பு கவனம் செலுத்திய இந்த பேரழிவு குறுகிய காலத்தில் வெற்றிகரமாக நிர்வகிப்பதன் மூலம் ஏற்படக்கூடிய ஒரு பெரிய கடல்சார் சுற்றுச்சூழல் பேரழிவைத் தடுக்க முடிந்தது. இதற்கிடையில் இலங்கை விமானப்படை பரிசோதித்த உலர் கெமிக்கல் பவுடர் Dry Chemical Powder (DCP) ரசாயன பைகள் மூலம் வெற்றிகரமான முடிவுகளை அடைய முடிந்தது இதனால், கப்பலின் தீப்பிழம்புகள் ஏற்படுவது நிறுத்தப்பட்டன.

இந்த சூழ்நிலையில், இந்திய கடற்படை மற்றும் பேரழிவு நிவாரண குழுக்கள் பாதிக்கப்பட்ட கப்பலுக்கு ஏறி அதன் உள்துறை உயர் தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்தி ஆய்வு செய்ய உள்ளனர்.

இப்போது, தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டிருந்தாலும், கப்பலின் உள்ளே இருக்கும் வெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்கள் காரணமாக மீண்டும் தீ ஏற்பட வாய்ப்புள்ளதால் இலங்கை கடற்படை நிலைமை குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த கப்பலின் வணிக மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள் சொந்தமான நிறுவனத்திலிருந்து மீட்பு நடவடிக்கை நிபுணர்கள், பேரழிவு மதிப்பீட்டாளர்கள் மற்றும் சட்ட ஆலோசகர் உட்பட 10 பிரிட்டிஷ் மற்றும் நெதர்லாந்து நிபுணர்கள் குழு இன்று காலை இலங்கைக்கு வந்து சேர்ந்தனர். கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து அவர்கள் எதிர்காலத்தில் மதிப்பீடு செய்வார்கள், மேலும் அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் கப்பல் தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்த நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்.

மேலும், இலங்கையின் கடல்சார் தேடல் மற்றும் மீட்புப் பகுதியிலிருந்து வெளியேறும் வரை, பாதிக்கப்பட்ட இந்த கப்பலுக்கு இலங்கை கடற்படை தொடர்ந்து உதவி வழங்கும்.