“New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது” என்ற தலைப்பில் 2020 செப்டம்பர் 07 அன்று 1800 மணிக்கு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது

சீரற்ற வானிலை காரணமாக MT New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் மீண்டும் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை மற்றும் பிற பங்குதாரர்களுக்கு சொந்தமான கப்பல்கள், விமானங்கள் மற்றும் டக் படகுகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த தீ விபத்து நிலைமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட கப்பலின் வணிக மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள் சொந்தமான நிறுவனத்தால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட 06 மீட்பு நடவடிக்கை வல்லுநர்கள் மற்றும் 11 பேரிடர் மேலாண்மை வல்லுநர்கள் அடங்கிய குழு, பாதிக்கப்பட்ட கப்பல் உள்ள கடல் பகுதிக்கு சென்று பேரழிவு மேலாண்மை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, இலங்கை கடற்படை மற்றும் பிற பேரிடர் நிர்வாக குழுக்கள், நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்றி, மீண்டும் வளர்ந்த தீ விபத்தைக் கட்டுப்படுத்த நெருக்கமான ஒருங்கிணைப்பில் தீவிரமாக செயல்படுகின்றன.

இலங்கை கடற்படை தலைமையிலான இந்த பேரழிவு மேலாண்மை நடவடிக்கையின் பங்குதாரர்களுக்கு சொந்தமான 09 கப்பல்கள், 05 டக் படகுகள் மற்றும் விமானங்கள் சங்கமங்கந்த பகுதியில் இருந்து 30 கடல் மைல் (56 கி.மீ) தொலைவில் மேற்கொள்ளப்படுகின்ற இந்த மேலாண்மை செயல்பாட்டில் இன்றைய தினமும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும், இலங்கை கடலோர காவல்படையின் 02 கப்பல்கள் மற்றும் இலங்கை கடற்படைக்கு சொந்தமான 03 துரித தாக்குல் படகுகள் வழங்கள் கப்பல்களாக இந்த பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையில், இந்திய கடலோர காவல்படையின் மற்றொரு டோர்னியர் விமானம் இன்று உலர் கெமிக்கல் பவுடர் Dry Chemical Powder (DCP) பொதிகளுடன் சென்னையிலிருந்து திருகோணமலை சீனா விரிகுடாவிற்கு வர உள்ளது.

இப்போது வரை எண்ணெய் சேமிப்பிற்கு தீ பரவுவதற்கோ அல்லது கப்பலில் இருந்து கடலுக்கு எண்ணெய் கசிவதற்கோ எந்த ஒரு ஆபத்தும் இல்லை. இருப்பினும், செப்டம்பர் 03 அன்று ஏற்பட்ட இந்த பேரழிவின் காரணமாக கடல் சூழலுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்ச்சிசெய்ய தேசிய நீர்வள வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (NARA), இலங்கை கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) மற்றும் ருஹுன பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சி குழுகள் நீர் மாதிரிகளை ஆய்வு செய்ய இந்த இடத்திற்கு வருகை தர உள்ளனர்.

அதன்படி, தீ கட்டுக்குள் வரும் வரை நிபுணர் குழுக்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் உதவியுடன் இலங்கை கடற்படையின் தலைமையில் இந்த பேரழிவு மேலாண்மை நடவடிக்கை தொடரும்.