செய்தி வெளியீடு


பாதகமான வானிலை காரணமாக “MT New Diamond“ கப்பலில் பரவிய தீ ஒருங்கிணைந்த பேரழிவு மேலாண்மை குழுவின் நடவடிக்கைகளினால் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது

பாதகமான வானிலை காரணமாக 2020 செப்டம்பர் 07 அன்று MT New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் மீண்டும் ஏற்பட்ட தீ இன்று விடியற்காலையில், பேரழிவு முகாமைத்துவ குழுக்களால் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கப்பலில் இருந்து இதுவரை தீப்பிழம்புகள் அல்லது புகை எதுவும் காணப்படவில்லை, மேலும், ஒரு டக் படகைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட கப்பல் மீண்டும் ஆழ்கடலுக்கு இழுக்கப்படுகின்றன. அதன்படி, பாதிக்கப்பட்ட எண்ணெய் கப்பல் இப்போது சங்கமங்கந்த பகுதியில் இருந்து சுமார் 37 கடல் மைல் தொலைவில் உள்ளதுடன் கரடுமுரடான கடல் சூழ்நிலையில் மற்றும் பலத்த காற்று மத்தியில் இந்த பேரழிவு மேலாண்மை நடவடிக்கை தொடர்கிறது.

இதற்கிடையில், கப்பலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் குறுகிய டீசல் எண்ணெய் இணைப்பு காணப்பட்டதுடன் இந்திய கடலோர காவல்படையின் டோர்னியர் விமானமொன்று டீசல் எரிபொருள் இணைப்பு காணப்பட்ட பகுதிக்கு சென்று அப்பகுதியில் ஒரு சிறப்பு இரசாயனம் தெளித்துள்ளது. தெளிக்கப்பட்ட இந்த இரசாயனம் கடல் நீரில் கலந்த டீசலின் ரசாயன கலவையை மாற்றி இதனால் கடல் சூழலில் ஏற்படக்கூடிய தாக்கத்தை குறைக்கும். மேலும், தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமைக்கு (NARA) சொந்தமான ஒரு கடல் ஆராய்ச்சி கப்பல் இப்பகுதிக்கு வந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

கடற்படைத் தளபதியின் உத்தரவின் பேரில், இலங்கை கடற்படையைச் சேர்ந்த மற்றொரு சிறப்பு பயிற்சி பெற்ற தீயணைப்பு மற்றும் பேரழிவு மேலாண்மை குழு இன்று (2020 செப்டம்பர் 09) இந்த இடத்திற்கு புறப்பட உள்ளது. கப்பலின் பேரழிவு நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன், அதன் தற்போதைய நிலையை மறுஆய்வு செய்வதற்கும், எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்க பிரத்தியேகங்களை சேகரிப்பதற்கும் அவர்கள் கப்பலில் ஏறுவார்கள்.

இலங்கை கடற்படை மற்றும் பிற பங்குதாரர்களுக்கு சொந்தமான கப்பல்கள், டக் படகுகள் மற்றும் விமானங்களைப் பயன்படுத்தி இலங்கைக்கு வந்த வெளிநாட்டு மீட்பு மற்றும் பேரழிவு மேலாண்மை குழுக்களின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கைகள் தொடர்கிறது. மேலும், இந்த பேரழிவு நிலைமை முழுவதுமாக தீர்க்கப்படும் வரை இலங்கை கடற்படை விழிப்புடன் உள்ளது. மற்றும் பங்குதாரர்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் தொடர்ந்து செயல்படும்.