சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 நபர்களுடன் மீன்பிடி பொருட்கள் கடற்படையால் கைது

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 நபர்களை மீன்பிடி உபகரணங்களுடன் கடற்படை கைது செய்தது.

இந்த நடவடிக்கைகள் பூனரின் பல்லிகுடா கடலோர கண்காணிப்பு இடத்திற்கு அருகிலுள்ள கடற்கரையிலும், முல்லைதீவு சென்மாலை கடற்பரப்பிலும், மட்டக்களப்பு கொடுவமட பகுதியிலும், மன்னார் அரிப்பு கடல் பகுதியிலும் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகளின் போது, 12 நபர்கள், 07 மீன்பிடிப் படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் உட்பட பல மீன்பிடி பொருட்களை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பூனரின், மதுரங்குலிய, முல்லைதீவு மற்றும் கற்பிட்டி பகுதிகளில் வசிக்கும் 19 முதல் 58 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் பிற மீன்பிடி பொருட்கள் முல்லைதீவு மற்றும் மட்டக்களப்பு மீன்வள உதவி இயக்குநர்களிடமும் பூனரின் மற்றும் மன்னாரில் உள்ள மீன்வள ஆய்வாளர்களிடமும் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.