கடற்படை உதவியுடன் உள்ளூர் கஞ்சா சேனையொன்று சுற்றிவளைப்பு

கடற்படை மற்றும் சூரியவெவ காவல்துறை சிறப்பு பணிக்குழு 2020 செப்டம்பர் 11 அன்று தனமல்வில, பலஹருவ பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது உள்ளூர் கஞ்சா பயிரிடப்பட்டிருந்த சேனை ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு இருந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தெற்கு கடற்படை கட்டளை மற்றும் சூரியவெவ பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஒருங்கினைந்து தனமல்வில பலஹருவ பகுதியில் மேற்கொண்டுள்ள இந்த சிறப்பு நடவடிக்கையின் போது ரகசியமாக பயிரிடப்பட்ட இந்த உள்ளூர் கஞ்சா சேனை கண்டுபிடிக்கப்பட்டதுடன் இங்கு ஒரு அடி வரை வளர்ந்த சுமார் 6000 கஞ்சா செடிகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாரு கண்டு பிடிக்கப்பட்ட உள்ளூர் கஞ்சா செடிகள் அதே இடத்தில் தீ இட்டு அழிக்கப்பட்டதுடன் சந்தேக நபர்கள் அப்பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தனமல்வில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.