சட்டவிரோத துப்பாக்கியொன்று மற்றும் ரவைகளுடன் ஒரு சந்தேக நபர் கடற்படையினரால் கைது

கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு 2020 செப்டம்பர் 23 அன்று மன்னார் பிரதான சாலையில், புத்தலம் 4 ஆம் கட்டை பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது துப்பாக்கியொன்று, ரவைகள் மற்றும் பல சட்டவிரோத பொருட்கள் வைத்திருந்த ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளது.

வடமேற்கு கடற்படை கட்டளை புத்தலம் காவல்துறை சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து மன்னார் பிரதான சாலையில், புத்தலம் 4 ஆம் கட்டை பகுதியில் மேற்கொண்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான இடத்தில் இருந்து 12 துளை துப்பாக்கியொன்று, 03 துப்பாக்கி ரவைகள், 133 வெற்று துப்பாக்கி ரவைகள், 370 கிராம் இரும்பு பந்துகள், 01 வாள் மற்றும் 01 கத்திக் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இது தவிர, இந்த நடவடிக்கையின் போது இருப்பிடத்தில் ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.

இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 48 வயதான புத்தலம் பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கிடையில், கைது செய்யப்பட்ட நபர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி மற்றும் மீதமுள்ள சட்டவிரோத பொருட்கள் புத்தலம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.