சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட சுமார் 902 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

மன்னார் தால்பாடு கடற்கரையில் 2020 அக்டோபர் 02 ஆம் திகதி நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடல் வழியாக இந்நாட்டுக்கு கொண்டுவர முட்பட்ட சுமார் 902 கிலோ கிராமுக்கு மேற்பட்ட மஞ்சளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மன்னார் தால்பாடு கடற்கரையில் மேற்கொண்டுள்ள இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்கரைக்கு வந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொண்று பரிசோதித்தனர் அப்போது அங்கிருந்து 19 சாக்குகளில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 902 கிலோ கிராம் மஞ்சள் (ஈரமான எடையில்) கண்டுபிடிக்கப்பட்டதுடன் டிங்கி படகில் இருந்த 02 சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 மற்றும் 48 வயதுடைய மன்னார் புதுக்குடுரிப்பு பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்., கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட மஞ்சள் பொதி யாழ்ப்பாண சுங்க அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சந்தேக நபர்கள் தனிமைப்படுத்தலுக்காக மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர். தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையைத் தொடர்ந்து, டிங்கி படகுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாழ்ப்பாண சுங்க அலுவலகத்தில் விசாரணைக்கு ஒப்படைக்கப்படுவார்கள்.