இரண்டு டன்களுக்கும் மேற்பட்ட உலர் மஞ்சளுடன் 06 சந்தேக நபர்கள் கடற்படையின் உதவியுடன் கைது

கடற்படையினர் 2020 அக்டோபர் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் உடப்புவ, பூனப்பிடிய பகுதியில் மற்றும் கற்பிட்டி, சின்னப்பாடு பகுதியில் நடத்திய சிறப்பு நடவடிக்கைகளின் போது 1700 கிலோகிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சள் கொண்ட மூன்று (03) சந்தேக நபர்களும், ​​ பொலிஸாருடன் இனைந்து மன்னார் வன்காலைபாடு பகுதியில் மேற்கொண்டுள்ள மற்றொரு நடவடிக்கையின் போது 344 கிலோகிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சள் கொண்ட மூன்று சந்தேக நபர்களும் (03) ஒரு லாரி வண்டியும் கைது செய்துள்ளனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் உடப்பு பூனப்பிடிய கடற்கரையில் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, ​​ 1297 கிலோகிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சள் கொண்ட 27 சாக்குகளுடன் 03 சந்தேகநபர்களை கைது செய்தனர். அங்கு மஞ்சளை ஏற்றிச் சென்ற டிங்கி படகு மற்றும் லாரியும் கடற்படையால் கைது செய்யப்பட்டன. இதற்கிடையில், அதே கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்கள், கற்பிட்டி சின்னப்பாடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு நடவடிக்கையின் போது, ​​ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 403 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கொண்ட 19 சாக்குகளை மீட்டெடுத்தனர். மேலும், வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் மன்னார் பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து மன்னார் வான்காலைப்பாடு பகுதியில் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, ​​சந்தேகத்திற்கிடமான லாரி வண்டியொன்று சோதனை செய்தனர். அங்கு உலர்ந்த மிளகாய், பெரிய வெங்காயம் மற்றும் சுரைக்காயுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 344 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கொண்ட 09 சாக்குகளுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் 34 முதல் 48 வயதுக்குட்பட்ட கொந்தன்தீவு, பல்லிவாசலபாடு, மன்னார், உகுவெல மற்றும் அல​வதுகொடை பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கிடையில், சந்தேக நபர்கள் மற்றும் மஞ்சல் பொதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அலுவலகத்தில், சின்னப்பாடு சுங்க தடுப்பு அலுவலகத்தில் மற்றும் மன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.