33 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் நான்கு சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது

மன்னார், நருவிலிகுளம் பகுதியில் 2020 அக்டோபர் 09 அன்று இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, 33 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் வன்காலே காவல்துறையினர் ஒருங்கினைந்து மன்னார், நருவிலிகுளம் பகுதியில் நடத்திய இந்த சிறப்பு நடவடிக்கையின் போது ஒரு சாக்கில் 10 பார்சல்கலாக அடைத்து வைக்கப்பட்ட 33 கிலோகிராம் மற்றும் 650 கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் (02) கைது செய்யப்பட்டனர். இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர்கள் அதே பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

மேலும், 2020 அக்டோபர் 07 ஆம் திகதி வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் பரயாணகுளம் காவல்துறை சிறப்பு பணிக்குழு சிலாவத்துர நகரப் பகுதியில் நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயாராக உள்ள 770 கிராம் கேரள கஞ்சாவுடன் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சந்தேகநபரும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட கேரள கஞ்சா மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வன்காலே மற்றும் சிலாவத்துர காவல் நிலையங்களுக்கு ஒப்படைக்கப்பட்டனர், மேலும் இதுபோன்ற சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்களை தடுக்க கடற்படை தொடர்ந்து தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.