உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மற்றும் ஒரு சந்தேகநபர் கடற்படையின் உதவியுடன் கைது

இலங்கை கடற்படை, கடலோர காவல்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு ஆகியோரால் மன்னார், நருவிலகுளம் மற்றும் கிரிந்த பகுதிகளில் 2020 அக்டோபர் 08, 09 ஆகிய திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மற்றும் ஒரு சந்தேக நபர் (01) கைது செய்யப்பட்டார்.

மன்னார் நருவிலகுளம் பகுதியில் வட மத்திய கடற்படை கட்டளை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இலங்கை கடலோர காவல்படை மற்றும் கதிர்காமம் காவல்துறை சிறப்பு பணிக்குழு இணைந்து கிரிந்த பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் பத்திரங்கள் இல்லாமல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 43 வயதான ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாரு நருவிலகுளம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கியை பரயாணகுளம் பொலிஸ் சிறப்பு பணிக்குழுவிடமும், கிரிந்த பகுதியில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கிரிந்த பொலிஸாரிடமும் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்க கடற்படை மற்றும் கடலோர காவல்படை நடவடிக்கை எடுத்துள்ளது.