39 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் 14 சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது

போதைப்பொருள் அச்சுறுத்தலை சமூகத்திலிருந்து ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை வலுப்படுத்திய கடற்படை, கடந்த இரண்டு வாரங்களில் தீவு முழுவதும் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, 39 கிலோ மற்றும் 197 கிராம் கஞ்சாவுடன் 14 சந்தேக நபர்களை கைது செய்தது.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் சிலாவத்துர மற்றும் கல்பிட்டி காவல்துறையுடன் இணைந்து புதுகுதிரிப்பு, நொரொச்சோலை, கரம்பே மற்றும் கல்பிட்டி பகுதிகளில் 2020 நவம்பர் 19, டிசம்பர் 3 மற்றும் 10 ஆகிய திகதிகளில் சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் விற்பனைக்கு தயாராக இருந்த மற்றும் கடத்தப்பட்ட 25 கிலோ மற்றும் 318 கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் ஏழு சந்தேக நபர்களும் ஒரு மோட்டார் வாகனமும் கைது செய்தது.

மேலும், கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினர் கலவஞ்சிகுடி காவல்துறை சிறப்பு பணிக்குழுவுடன் மற்றும் முல்லைதீவு காவல்துறையுடன் இணைந்து 2020 டிசம்பர் 02, 04 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மட்டக்களப்பு, புத்தூர், புல்மூட்டை மற்றும் புத்துகுதிரிப்பு பகுதிகளில் சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் விற்பனைக்காக வைத்திருந்த, கடத்தப்பட்ட மற்றும் விற்க முயற்சித்த சுமார் 02 கிலோ மற்றும் 674 கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கைது செய்யப்பட்டன.

மேலும், தெற்கு கடற்படை கட்டளையின் மற்றும் வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் மன்னார் பொலிஸ் சிறப்பு பணிக்குழுக்கள் மற்றும் ஜெயபுரம் காவல்துறையுடன் இணைந்து 2020 டிசம்பர் 10, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் எம்பிலிப்பிட்டிய, மன்னார் மற்றும் முலங்காவில் பல்லவராயங்கட்டு பகுதிகளில் சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் சுமார் 11 கிலோ மற்றும் 205 கிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு (04) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 முதல் 46 வயதுக்குட்பட்ட சிலாவத்துர, எத்தாலை, பானதுர, வீரகெட்டிய, கொழும்பு 12, கொழும்பு 14, மட்டக்களப்பு, புதுநகர், புல்மூட்டை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள், மோட்டார் வாகனம் மற்றும் 02 மோட்டார் சைக்கிள்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவதுர, நொரோச்சோலை, கல்பிட்டி, மட்டக்களப்பு, புல்மூட்டை, முல்லைதீவு, எம்பிலிப்பிட்டி, மன்னார் மற்றும் ஜெயபுரம் காவல் நிலையங்களிடம் ஒப்படைக்கப்பட்டன.