நடவடிக்கை செய்தி

மன்னார் மந்தாய் கடற்கரைக்கு அருகிலுள்ள புதரில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 67 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை கடற்படை மீட்டுள்ளது

2021 ஜனவரி 29 ஆம் திகதி மன்னார் மந்தாய் பகுதியில் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது சுமார் 67 கிலோ மற்றும் 500 கிராம் கேரள கஞ்சாவை கடற்படை பறிமுதல் செய்தது.

30 Jan 2021

சுமார் 31 கிலோ கிராம் கேரள கஞ்சாவை மாந்தாய் கடற்கரையில் கடற்படை மீட்டுள்ளது

2021 ஜனவரி 26 ஆம் திகதி மன்னார் மாந்தாய் பகுதியில் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது 31 கிலோகிராம் கேரள கஞ்சாவை கடற்படை பறிமுதல் செய்தது.

27 Jan 2021

சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட உலர்ந்த மஞ்சள் மற்றும் கிளைபோசேட் பொதியொன்று கடற்படையினரால் கைது

கல்பிட்டி தலுவ கடற்கரையில் கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 1340 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 80 கிலோகிராம் கிளைபோசேட் ஆகியவற்றுடன் மூன்று சந்தேக நபர்கள் இன்று (ஜனவரி 26, 2021) கைது செய்யப்பட்டனர்.

26 Jan 2021

“லைபீரியக் கொடியின் கீழ் பயணம் செய்த ஒரு கப்பல் சிறிய இராவணா பாறையில் சிக்கி ஆபத்தில் உள்ளது” என்ற தலைப்பில் 2021 ஜனவரி 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட செய்தியுடன் தொடர்புடையது.

2021 ஜனவரி 23 ஆம் திகதி இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் 5.5 கடல் மைல் (10 கி.மீ) தூரத்தில் சிறிய இராவணா பாறையில் சிக்கி ஆபத்தான MV Eurosun என்ற கப்பல், 2021 ஜனவரி 24 அன்று அந்த பகுதியில் ஏற்பட்ட அலைச்சலுகையால் பாறையில் இருந்து விலகியது. பின்னர் சிறிய இராவணா பாறைக்கு தென்மேற்கே ஐந்து கடல் மைல் தொலைவில் பாதுகாப்பாக நங்கூரமிடப்பட்டது.

25 Jan 2021

124 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கொண்ட இரண்டு சந்தேக நபர்கள் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது

கடற்படையால் 2021 ஜனவரி 06 ஆம் திகதி வடக்கு கடற்பரப்பில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 124 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

08 Jan 2021

கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற உலர்ந்த மஞ்சள் மற்றும் ஏலக்காய் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

வடமேற்கு கடல் பகுதியில் 2021 ஜனவரி 05 அன்று கடற்படை நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 1680 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் சுமார் 150 கிலோ கிராம் ஏலக்காய் ஆகியவையுடன் இந்திய படகொன்று (Dhow) மற்றும் நாங்கு இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

06 Jan 2021

மேற்குக் கடலில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை நடவடிக்கையின் போது 60 கோடி ரூபா பெறுமதியான போதைபொருட்களுடன் நால்வர் கைது

கடற்படையினர் இன்று (2021 ஜனவரி 04) நீர் கொழும்பு கடற்பகுதியில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது பல நாள் மீன்பிடி படகொன்றில் கொண்டு சென்ற 100 கிலோ கிராமுக்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine) மற்றும் சுமார் 80 கிலோ கிராம் ஹசீஸ் போதைப்பொருளுடன் 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

04 Jan 2021

போதைப்பொருள் கொண்ட 04 சந்தேக நபர்கள் தெற்கு கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது

காலி, தொடங்தூவ கடல் பகுதியில் 2020 டிசம்பர் 31 ஆம் திகதி கடற்படையினர் மேற்கொண்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது பல நாள் மீன்பிடி படகொன்றில் கடத்திக் கொண்டு இருந்த 05 கிலோ மற்றும் 945 கிராம் ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine), 2 கிலோ மற்றும் 47 கிராம் ஹெராயின் மற்றம் 03 கிராம் கேரள கஞ்சா ஆகியவற்றையுடன் பல நாள் மீன்பிடி படகும் நான்கு (04) சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

01 Jan 2021