18 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கடற்படை உதவியுடன் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படை 2021 மார்ச் 01 ஆம் திகதி தலைமன்னார் ஊருமலை பகுதியில் சிறப்பு தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொண்டு 18 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை மீட்டது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக அரசாங்கம் வகுத்துள்ள பொறிமுறைக்கு ஆதரவாக இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி, தலைமன்னார் பொலிஸாரின் ஒருங்கிணைப்புடன் வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மார்ச் 01 ஆம் திகதி தலைமன்னார், ஊருமலை பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது 10 பொட்டலங்களில் நிரைக்கப்பட்டு காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18 கிலோ மற்றும் 505 கிராம் கேரள கஞ்சா (ஈரமான ஏடை) மீட்கப்பட்டன.

கோவிட் -19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட, இந்த நடவடிக்கையில் மீட்கப்பட்ட கேரள கஞ்சா மேலதிக விசாரணைக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில், இந்த மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களைத் தேடி தற்போது கடற்படை மற்றும் தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.