10 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள கேரள கஞ்சா கடற்படையினரால் கைது

மன்னார், வன்காலைபாடு கடற்கரை பகுதியில் 2021 மார்ச் 30 ஆம் திகதி மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகளின் போது 33 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலோரப் பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக கடற்படை விழிப்புடன் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன்படி, மன்னார், வன்காலைபாடு கடற்கரை பகுதிக்கு நெருங்கிய சந்தேகத்திற்கிடமான படகொன்று தொடர்பாக மார்ச் 30 ம் திகதி வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 15 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 33 கிலோ மற்றும் 415 கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிடிக்கப்பட்டது.

கடற்படை நடவடிக்கைகள் காரணமாக கடத்தல்காரர்கள் இந்த கேரள கஞ்சாவை மறைத்து வைத்திருந்த்தாக சந்தேகிக்கப்படுகிறது, மேலும் இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படை கைப்பற்றிய கஞ்சாவின் தெரு மதிப்பு ரூ .10 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும், கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பேசாளை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.