சட்டவிரோதமான முறையில் இந்த நாட்டிலிருந்து குடியேற முயன்ற 20 நபர்கள் கடற்படையினரால் கைது

சிலாவத்துர, கொண்டச்சிகுடா பகுதியில் 2021 ஏப்ரல் 06 ஆம் திகதி நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டிற்கு குடியேறத் தயாரான 20 பேரை கடற்படை கைது செய்தது.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் சிலாவத்துர, கொண்டச்சிகுடா பகுதியில் மேற்கொண்ட இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான 04 முச்சக்கர வண்டிகள் சோதனை செய்யப்பட்டதுடன் அங்கு மேற்கொண்டுள்ள மேலதிக விசாரணையில், முச்சக்கர வண்டிகளில் பயணித்த 20 பேர் கடல் வழியாக வெளிநாட்டிற்கு குடிபெயரத் தயாராகி சிலவத்துர கடல் பகுதிக்கு முச்சக்கர வண்டிகளில் சென்று கொண்டிருந்ததை தெரியவந்தது, அதன் படி குறித்த குழுவும் முச்சக்கர வண்டிகளும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

கடற்படையால் கைது செய்யப்பட்ட 20 நபர்களின் 14 ஆண்கள், 04 பெண்கள், 13 வயது சிறுமி மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் அடங்குவர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் 09 பேர் முல்லைதீவு பகுதியிலும், 04 பேர் யாழ்ப்பாணம் பகுதியிலும், 04 பேர் மன்னார் பகுதியிலும், வாலச்சேனை, வத்தல மற்றும் புத்தலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தலா ஒரு நபர்கள் இவ்வாரு அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த கடத்தலைத் திட்டமிட்ட நபரும் இந்தக் குழுவில் இருப்பதாக கடற்படை சந்தேகப்படுகிறது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் அவர்களது முச்சக்கர வண்டிகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துர காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதேபோல், 2021 மார்ச் 11 ஆம் திகதி சட்டவிரோதமாக நாட்டிலிருந்து குடியேற முயன்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு குழுவினரை கடற்படை கைது செய்தது. அதன் படி, கடலில் இதுபோன்ற சட்டவிரோத இடம்பெயர்வு முயற்சிகளைத் தடுக்க கடற்படை தொடர்ந்து தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.