வணிக வெடிபொருட்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படை தொடர்கிறது

வணிக வெடிபொருட்களைப் பயன்படுத்தி நடத்தப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுக்கும் நோக்கில், கடற்படை கடந்த வாரத்தில் கிழக்கு கடற்படை கட்டளையில் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நடவடிக்கைகளின் போது, மீன்பிடி நடவடிக்கைக்காக வடிவமைக்கப்பட்ட பல வணிக வெடிபொருட்களுடன் 02 சந்தேக நபர்களை கடற்படை கைப்பற்றியது.

சில நபர்களால் வெடிபொருட்களைப் பயன்படுத்தி நடத்தப்படுகின்ற மீன்பிடி நடைமுறைகள் காரணத்தினால் இப்பகுதியில் உள்ள மிகச்சிறிய மீன்களிலிருந்து, அனைத்து கடல் உயிரினங்களும் பவளப்பாறைகளும் அழிந்து வருகிறது. குறித்த காரணத்தினால் கடல் சூழலின் பல்லுயிர் மற்றும் உயிர்வாழும் மீனகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. வெடிபொருட்களைப் பயன்படுத்தி சில நபர்களால் மேற்கொள்ளப்படுகின்ற இந்த சட்டவிரோத மீன்பிடித்தல் மூலம் சட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப நாட்டின் பொருளாதாரத்திற்கு பலமாக உள்ள பெரும்பான்மை மீன்பிடி சமூகத்தின் மீன் அறுவடை குறைவதை குறித்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன் படி, கடல் சூழலின் பல்லுயிர் மற்றும் அதன் இருப்பைப் பாதுகாக்க மற்றும் மீன்பிடித் தொழிலில் சட்டப்பூர்வமாக ஈடுபட்டுள்ள நாட்டின் பெரும்பான்மையான மீன்பிடி சமூகத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக வெடிபொருட்கள் பயன்பாடு உட்பட அனைத்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளையும் தடுப்பதில் இலங்கை கடற்படை தொடர்ந்து விழிப்புடன் உள்ளது.

அதன்படி, 2021 ஏப்ரல் 5 அன்று திருகோணமலை சலபெயாரு கடற்கரையில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ரப்பர் குழாய்யொன்று பயன்படுத்தி நீர் கசிவைத் தடுக்கும் வகையில் தயாரித்து தொகுப்பொன்றில் நிரப்பி ஒரு மிதவை உதவியுடன் மேற்பரப்புக்கு தெரியாமல் நீரில் மூழ்கி வைக்கப்பட்ட நீர் ஜெல் குச்சிகள் (Water Gel Sticks) அடங்கிய 04 பொதிகள், 03 அங்குல நீளமுள்ள 06 சேவை நூல்கள் மற்றும் மின்சாரம் இல்லாத டெடனேட்டர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

நீர் கசிவைத் தடுக்க ரப்பர் குழாய்களைப் பயன்படுத்தி வீட்டில் தயாரிக்கப்பட்ட தொகுப்பொன்றில் வெடிபொருளைத் தக்கவைத்து, கடல் சூழலில் கண்ணுக்குத் தெரியாமல் வைத்திருப்பது மூலம் கடற்படை மற்றும் பிற சட்ட அமலாக்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாமல் வெடிபொருட்களைப் பயன்படுத்தி , கடல் சூழலை அழித்து மீன்பிடி செயல்முறையைத் தொடர்வது இந்த சிறுபான்மைக் குழுவின் நோக்கமானது.

மேலும், ஏப்ரல் 01 ம் திகதி திருகோணமலை எரக்கண்டி பகுதியில் குச்சவேலி காவல்துறையினருடன் இனைந்து நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 82 நீர் ஜெல் குச்சிகளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார், மற்றொருவர் மார்ச் 27 அன்று 01 நீர் ஜெல் குச்சிகளுடன் பொடுவக்கட்டு பகுதியில் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும், வணிக வெடிபொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவேலி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

கடல் சூழல், மீன்வள வளங்கள் மற்றும் மீன்பிடி சமூகத்தின் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்காக, இதுபோன்ற சட்டவிரோத மீன்பிடி முறைகளில் ஈடுபடும் மீனவர்களை கைது செய்ய கடற்படை மீன்பிடி சமூகத்தின் உதவியுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.