ரூ .72 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவை வட கடலில் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டது

யாழ்ப்பாணம், சில்லாலை கடல் பகுதியில் 2021 ஏப்ரல் 28 ஆம் திகதி மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகளின் போது 240 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன் படி, ஏப்ரல் 28 ஆம் திகதி, வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் யாழ்ப்பாணம், சில்லாலை கடற்கரையில் சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், 07 பைகளில் 105 பொட்டலங்களாக ஒரு இறால் வளர்ப்பு வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 240.95 கிலோகிராம் கேரள கஞ்சாவை மீட்கப்பட்டது.

அப்பகுதியில் கடற்படை மேற்கொண்டுள்ள தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகளின் காரணமாக கேரள கஞ்சாவை கரைக்கு கொண்டு வர முடியாமல் கடத்தல்காரர்கள் இவ்வாரு இறால் வளர்ப்பு வளாகத்தில் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையில், மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் தெரு மதிப்பு ரூ. 72 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட கஞ்சா பொதிகள் தீ வைத்து அழிக்கப்பட்டது.