சட்டவிரோத போதைப்பொருட்கள் கொண்ட மூன்று சந்தேக நபர்கள் கடற்படையின் உதவியுடன் கைது

கடற்படையினர் 2021 மே 03 ஆம் திகதி ராஜகிரிய பகுதியில் நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 311 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் (Crystal methamphetamine) மற்றம் 47 கிராம் 250 மில்லிகிராம் ஹஷிஷ் போதைப்பொருட்களுடன் 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் ராஜகிரிய சிறப்பு பணிக்குழு வீரர்கள் இணைந்து ராஜகிரிய பகுதியில் மேற்கொண்டுள்ள இந்த சிறப்பு நடவடிக்கையின் போது, மூன்று சந்தேக நபர்கள் சோதனை செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 311 கிராம் 250 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் மற்றும் 47 கிராம் 250 மில்லிகிராம் ஹஷிஷ் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த சந்தேக நபர்கள் போதைப்பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்வது தெரியவந்ததுடன், போதைப்பொருட்களுடன் மூன்று (03) சந்தேக நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டவர்கள் 26 முதல் 30 வயதுக்குட்பட்ட பொரெல்ல பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். குறித்த சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொரெல்ல காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.